மனைவியை கோடரியால் தாக்கிக் கொன்ற கணவன் - நுவரெலியாவில் சம்பவம்

Published By: T Yuwaraj

26 Jun, 2022 | 12:51 PM
image

நுவரெலியா சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் கணவரால் கோடாரி தாக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No description available.

நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் ஒன்றரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் சத்தியவாணி வயது (24) என்ற தாயே பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளம் தாயின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன், பகுதி நேர வருமானத்திற்கு நுவரெலியா நகரில் முச்சக்கரவண்டி செலுத்தி வருகின்றார்.

No description available.

இந்நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவருக்கும், மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது 

இதன்போது ஆத்திரமடைந்த கணவன்,  கோடரியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததுடன், கணவன் தனது இளய மகளைத் தூக்கிக் கொண்டு,  இரவோடு இரவாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில், சரணடைந்துள்ளார்

No description available.

மேலும் சம்பவ இடத்திற்கு இன்று (26) காலை நுவரெலியா மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணை நடத்தியுள்ளார்.

நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலம் சட்டவைத்தியர் ஒருவரின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40
news-image

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய...

2023-05-28 17:55:09
news-image

இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள்...

2023-05-28 17:32:49
news-image

விலை திருத்தத்துக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீட்டை...

2023-05-28 16:58:38
news-image

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்...

2023-05-28 15:28:02
news-image

கேகாலை, அரநாயக்க நீர் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட...

2023-05-28 15:40:53