பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64 ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான எரிபொருட்கள் மீட்பு - பொலிஸ் பேச்சாளர்

Published By: Vishnu

26 Jun, 2022 | 12:27 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக எரிபொருள் பதுக்கல் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 64 000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்க்கப்பட்டுள்ளதோடு , 600 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள எரிபொருள் தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்களால் பொலிஸார் வலியுறுத்தப்படுவதாகவும் , அனைவரதும் பாதுகாப்பினைக் கருதி அவ்வாறான செயற்பாடுகளில் தலையிட வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருள் பதுக்கல் தொடர்பில் 25 ஆம் திகதி  சனிக்கிழமை காலை வரை 670 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது 675 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 636 லீற்றர் பெற்றோல் , 33 462 லீற்றர் டீசல் , 11 100 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக எரிபொருட்களைப் பதுக்கும் இவ்வாறான சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடன் அநாவசியமாக மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டு;க் கொள்கின்றோம். பொலிஸாருடன் பொது மக்கள் முரண்படும் போது தேவையேற்படின் உயர் பொலிஸ் உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸாரை கடமையில் இணைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு முரண்பாடுகளின் போது அவற்றினை காணொளியாக பதிவு செய்து கொள்வதற்கும் , தேவையேற்படின் ஏனைய சட்ட நடவடிக்கைகளின் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்கள் , பொலிஸாரை வலியுறுத்துகின்றனர். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47