அரசாங்கம் ரஷ்யாவின் உதவியை பெற்றுக்கொள்ளாமலிருப்பது மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாரிய குற்றமாகும் - கம்மன்பில

Published By: Vishnu

26 Jun, 2022 | 12:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பு மிக மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் கொள்வனவிற்கு அரசாங்கம் ரஸ்யாவின் உதவியை பெற்றுக்கொள்ளாமலிருப்பது மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாரியதொரு குற்றமாகும் என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ரஸ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தாமலிருப்பது குறித்து தேசிய சுமந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ' உங்களின் (விமல் வீரவன்ச) கூட்டணியில் உள்ள முன்னாள் வலுசக்தி அமைச்சர் கடந்த ஒன்றரை வருடகாலமாக அமைச்சு பதவி வகித்தார்.அவர் ஏன் ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளவில்லை 'என குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன கட்சிகளில் வலுசக்தி அமைச்சராக நான் மாத்திரமே பதவி வகித்துள்ளேன் ஆகவே என் பெயரை குறிப்பிடாமல் என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகுகிறது.ஆகவே வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துவது அவசியமானது.

ரஸ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் 2022.பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமானது. ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார தடையினை கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி முதல் விதிக்க ஆரம்பித்தன.மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி என்னை வலுசக்தி அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார். ரஸ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை பலமுறை எடுத்துரைத்துள்ளேன் என்பதற்கு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பிரதான சான்றாக உள்ளன.

எரிபொருள் விநியோக கட்டமைப்பு எதிர்வரும் மாதமளவில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ளும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த காலங்களிலில் இருந்து தொடர்ச்சியாக குறிப்பிட்டார்கள். இருப்பினும் இந்தியா மற்றும் சீனாவின் கடன் வசதிகளின் நீண்டகால கடன் அடிப்படையில் குறித்த நெருக்கடி நிலைமையினை எம்மால் ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடிந்தது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை எரிபொருள் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள சிறந்த நாடாக ரஸ்யா காணப்படுகிறது .ரஸ்யாவிடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளது. இருப்பினும் இலங்கை இதுவரை ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள சாத்தியமான எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்கள் முரண்பட்டுக் கொண்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ள வேளையிலும் அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தாமலிருப்பது மக்களுக்கு எதிராக இழைக்கும் பாரிய குற்றமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07