கடனுதவிக்கு பதில் தனது அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியது இந்தியா

By Rajeeban

26 Jun, 2022 | 10:02 AM
image

இலங்கைக்கு கடனுதவிகளை வழங்குவதற்கு பதில் இந்தியா இலங்கையில் தனது அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தவேண்டு;ம் என விருப்பம் வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை இலங்கைக்கு சில மணிநேர விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு மேலும் கடனுதவிகளை வழங்குவதற்கு பதில்  இந்திய முன்னெடுக்கும்  திட்டங்களை நிறைவேற்றுவதை துரிதப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார செயலாளர் தலைமையிலான  இந்திய உயர்மட்டகுழுவினர்  ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதுடன் இந்தியா தலைமையில் புதிய அபிவிருத்தி திட்டங்களை வலியுறுத்தியுள்ளனர்.

மன்னாரில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதுப்பித்தக்க சக்தி திட்டம் மேற்கு கொள்கலன் முனையம் போன்றவற்றை துரிதப்படுத்துவதற்கான விருப்பத்தினை இந்திய உயர்மட்ட குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

எரிபொருளிற்காக இந்தியாவிடமிருந்து மேலும் கடன்கள் கிடைப்பதற்கான  வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள தகவலறிந்த வட்டாரங்கள் ஒருபில்லியன் டொலர்நாணய இடமாற்றிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right