மீண்டும் புதிய அரசியலமைப்பு தெரிவுக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியும் உள்ளதாம்

25 Jun, 2022 | 08:50 PM
image

-ஆர்.ராம்

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கான சூழமைவுகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்காக, அமைச்சரவையின் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கான அனுமதியும் உள்ளதாகவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜதாச ராஜபக்ஷவினால் கலந்துரையாடலில் பங்கேற்ற தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மைய நாட்களில், நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுடன் பொதுஜனபெரமுனவில் இருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் அணியின் பிரதிநிதிகளும்ரூபவ் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும்ரூபவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் உத்தேசிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமான கலந்துரையடல்களில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, உத்தேச 21ஆவது திருத்தச்சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தன.

அச்சமயத்தில், நீதி அமைச்சரால், புதிய அரசியலமைப்புக்கான தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கான அனுமதி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகளில் ஒருவர், அவ்வாறானால், 21ஆவது திருத்தச்சட்டத்தினை கைவிட்டு, புதிய அரசிலமைப்பினை உருவாக்க முடியுமல்லவா என்று பரிந்துரைத்துள்ளார்.

எனினும்ரூபவ் அது உடனடியாகச் சாத்தியமாகுமா என்பது தொடர்பில் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ள நிலையில்ரூபவ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் காலத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவு உள்ளது. அத்துடன் கடந்த ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் பல்வேறு அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் உள்ளன.

ஆகவே, புதிய அரசியலமைப்பினை உடனடியாக உருவாக்குவதில் பிரச்சினைகள் இல்லை என்று குறித்த கூட்டமைப்பின் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

எனினும், பொதுஜனபெரமுனவின் சுயாதீன அணியில் பங்கேற்றவர்களால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதானால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆறுமாதங்களுக்குள் புதிய அரசியலமைப்பு உருவக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டால் 21 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என்ற நிலைப்பாட்டில் சில தரப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தகலந்துரையாடல்கள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்புக்களிடத்தில் விபரங்களைக் கோரியபோதும்ரூபவ் குறித்த கலந்துரையாடல்கள் மூடி அறை சந்திப்புக்கள் என்பதால் தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்று பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right