ஊழல்மோசடிகள் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரதமர் ரணில் இணங்கியமை தவறு - சுமந்திரன்

25 Jun, 2022 | 08:10 PM
image

(நா.தனுஜா)

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அதேபோன்று ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதற்கான காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இராஜதந்திரியான மார்க் மெலோச்-பிரவுன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருந்த பதிவில் வலியுறுத்தியுள்ள அவர், அவ்வாறு தெரிந்துகொள்ளாவிட்டால், சர்வதேச நாணய நிதியம் உதவிகள் தேவைப்படும் மக்களுக்குப் பதிலாக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.

 அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

 'இதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 

எந்தவொரு இடைக்கால ஏற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது. 

ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இதனை ஓர் நிபந்தனையாக முன்வைத்தமை சரியான விடயமாகும். 

அதேபோன்று ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறாகும்' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு தேவையான பணத்தை ஏன் வழங்காமல்...

2023-03-23 16:24:26
news-image

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை...

2023-03-23 16:08:45
news-image

அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற...

2023-03-23 16:06:04
news-image

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு நிலையான...

2023-03-23 16:00:04
news-image

மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி...

2023-03-23 15:16:05
news-image

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர்...

2023-03-23 16:52:20
news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51