அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று இலங்கை வருகிறது

Published By: Digital Desk 3

25 Jun, 2022 | 07:41 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்டக்குழு இன்றைய தினம் (26) இலங்கையை வந்தடைய இருப்பதுடன், இதன்போது இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து அவர்கள் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக்குழு எதிர்வரும் புதன்கிழமை (29) வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிக்ள உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது.

இச்சந்திப்புக்களின்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவக்கூடிய வழிமுறைகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையர்கள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரதானமாக ஆராயப்படவுள்ளது.

இந்த விஜயமானது இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன தொடர்பில் அமெரிக்கா கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளவலியுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். 'தற்போது இலங்கையர்கள் அவர்களது வரலாற்றில் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஜனநாயகக்கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்குமான எமது உதவிகள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா கடந்த இருவாரங்களில் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கென 120 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்திருப்பதுடன், இலங்கையின் பால் பொருள் உற்பத்திற்கு 27 மில்லியன் டொலர்களையும், பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு 5.75 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வருங்காலங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கும், உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும் பொதுச்சுகாதாரசேவையை மேம்படுத்துவதற்கும் அவசியமான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்றும், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான இலங்கையின் தீர்மானத்தைத் தாம் வலுவாக ஆதரிப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17