திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்த நிலையில், அவருக்கு திருச்சி அரச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்பு உடைய இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை தமிழர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
30 பேரையும் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருச்சி அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள இலங்கை தமிழர்கள், நாங்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருவதாகவும் தங்களை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே இலங்கை தமிழர்கள் 4 பேர் திடீரென மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி சிறிதுநேரம் மரத்தில் அமர்ந்திருந்த அவர்கள், பின்னர் கீழே இறங்கினார்கள்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM