கொள்கைகளுக்கேற்ப இலங்கைக்கு உதவ முடியும் ; சர்வதேச நாணய நிதியக்குழு தெரிவிப்பு

Published By: Digital Desk 3

25 Jun, 2022 | 12:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு, தமது கொள்கைகளுக்கு ஏற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இக்குழு தனது முதலாவது சந்திப்பினை நாட்டுக்கு விஜயம் செய்த அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்தது. எனினும் இதன் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையிலேயே இக்குழு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பின் போதே, தமது கொள்கைகளுக்கமைய இலங்கைக்கு உதவ முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வார காலம் இந்நாட்டில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்கின்றது.  

இக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கி ஆளுனர் மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விளக்கமளித்தனர்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி , இக்கட்டான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் பீட்டர் ப்ரூயர், செயற்பாட்டுத் தலைவர் மொசாஹிரோ நொசாஹி, வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் ஃபெரிதானு செட்யாவான்,  ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ஆன் மெரி குல்டே,  சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சீ. அமரசேகர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, பிரதி நிதிச் செயலாளர் எம்.எஸ்.எஸ். சமன் பெர்னாண்டோ, பிரதி ஆளுநர் டி.எம்.ஜெ.வை.பி.பெர்னாண்டோ மற்றும் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04