மக்கள் ஆர்ப்பாட்டம் ; ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல்

By T. Saranya

25 Jun, 2022 | 01:02 PM
image

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர்.

இன்று காலை மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் ஹட்டன் பிரதேசத்திற்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right