எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் ; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி

By T. Saranya

25 Jun, 2022 | 11:45 AM
image

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த மோதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோதிலில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான 4 பேர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right