நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி

By T. Saranya

25 Jun, 2022 | 11:37 AM
image

நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் விவரம் குறித்த எந்த தகவலையும் பொலிஸார் வெளியிடவில்லை. 

நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right