வத்தளை துப்பாக்கிச் சூடு :உளவு பார்த்த இருவர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரணை 

Published By: Digital Desk 4

24 Jun, 2022 | 08:25 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  எலகந்த - ஹெந்தல வீதியில்   இளைஞர் ஒருவர்  அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துப்பாக்கியுடன் ஒருவர் கைது | Virakesari.lk

அக்கொலை தொடர்பில் உளவு பார்த்து, கொலையாளிகளுக்கு உதவியதாக கூறப்படும் இரு இளைஞர்களே இவ்வாறு வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24, 27 வயதுகளை உடைய குறித்த இரு இளைஞர்களையும் தடுப்புக் காவலில் வைத்துள்ள பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.

மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த  அடையாளம் தெரியாத நபர்கள்,  ரீ 56 ரக துப்பாக்கியைக் கொண்டு கடந்த 14 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதுடன், தாக்குதலின் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த கொழும்பு – 15,  மட்டக்குளி, அலிவத்த பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இரு பாதாள குழுக்களிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றமையால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என  பொலிஸார்  சந்தேகிப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்ட நிலையில்   சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ்  ஆரம்பிக்கப்பட்டது.

 இந் நிலையிலேயே, கொல்லப்பட்ட  23 வயது இளைஞர் உடற் பயிற்சி கூடத்திலிருந்து வெளியேறும் போது அது குறித்த தகவலை கொலையாளிகளுக்கு வழங்கியதாக கூறப்படும் இளைஞரும், முச்சக்கர வண்டி ஒன்றின் ஊடாக கொலையாளிகளுக்கு உதவியதாக கூறப்படும்  இளைஞர் ஒருவரும் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும் இதுவரை கொலையாளிகள் கைதுச் செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55