(ந.ஜெகதீஸ்)

2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் விநியோக நடவடிக்கை இன்று  ஆரம்பமாகியுள்ளததாக கல்வியமைச்சு அறிவித்தள்ளது.

இதன்படி 4 இலட்ச மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளது. குறித்த வவுச்சர்கள்  மகாணங்கள் மற்றும் வலய கல்விக்காரியாலயங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் இம்முறை தரம் 1 தொடக்கம் 5 வரையிலான மாணவர்களுக்கான சீருடை வவுச்சரின் பெருமதி  500 ருபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எனினும் புதிதாக பாடசாலைகளுக்கு தரம் 1 இற்காக அனுமதி பெறும் மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சேர்த்துகொள்ள பட்ட பின்னரே குறித்த வவுச்சர் வழங்கப்படும்

பாடசாலை சீறுடை விநியோகத்தில் அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவீனங்களை கட்டுப்படுத்தவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குறித்த சீருடைகளுக்கான வவுச்சர் முறை அறிமுகப்படத்தப்பட்டது.

எனினும் குறித்த சீருடை வவுச்சர் முறை மூலம் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இம்முறை நிர்வாக அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் அதிபர்களுக்கு இடையில் எவ்வித சிக்கலும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த சீருடைகளுக்கான வவுச்சர் விநியோக நடவடிக்கை இன்றிலிருந்து விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என  அமைச்சு குறிப்பிட்டுள்ளது.