விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 போராட்டக்காரர்களில் நால்வருக்கு பிணை - மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Published By: Digital Desk 4

24 Jun, 2022 | 05:36 PM
image

( எம்.எப்.எம்பஸீர்)

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் நேரடியான  பங்களிப்புக்களை நல்கி வரும்  7 முன்னணி போராட்டக் காரர்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவர்களில் நால்வர் இன்று (24) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நடிகர் ஜெஹான் அப்புஹாமி, ஜகத் மனுவர்ன உள்ளிட்ட நால்வரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்  குறித்த விவகார வழக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக  இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன் வைத்த வாதங்களை அடுத்து இந்த பிணை வழங்கப்பட்டது. 

ஜகத் மனுவர்ன, தம்மிக முனசிங்க,  எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி ஆகிய போராட்டக் காரர்கள் நால்வரே  இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது பொலிஸார் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தாலும் அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை அவதானித்தே நீதிவான் பிணையளித்தார்.

 எவ்வாறாயினும், லஹிரு வீரசேகர, ரனிந்து சேனாரத்ன எனும் ரெட்டா, ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர் ஆகியோரின் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை நிராகரித்த நீதிவான் திலின கமகே,  அவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அவர்களை ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த 17 ஆம் திகதி,  9 முன்னணி போராட்டக் காரர்களைக் கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரனிந்து சேனாரத்ன எனும் ரெட்டா, ஜகத் மனுவர்ன, தம்மிக முனசிங்க, ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரையே கைது செய்ய இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களில்  வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரை தவிற ஏனையோர் மருதானை பொலிஸ்  நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே, கோட்டை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 22 ஆம் திகதி  இரவு பொலிஸாரால் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

 சட்ட விரோத கூட்டமொன்றின் உறுப்பினராக செயற்பட்டமை,  பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விலைவித்தமை,  பலாத்காரம் செய்தமை,  பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, பொது சொத்துக்கள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில்  சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே, இன்று அவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் முன் வைக்கப்பட்டது,  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,  சிரேஷ்ட சட்டத்தரணிகளான கெளசல்ய நவரட்ன,  உபுல் குமாரப்பெரும,  தர்ஷன குருப்பு,  அமில பல்லியகே,  நுவன் போப்பகே,  மஞ்சுள பாலசூரிய,  புத்திக திலகரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகளால் பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனைவிட, கடந்த 10 ஆம் திகதி  தலங்கம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பில் வசந்த முதலிகே  சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அது குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. எனினும் அவ்வழக்கில் எந்த கைது உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31