இலஞ்ச ஊழல்  வழக்கு : நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜோன்ஸ்டனுக்கு அறிவித்தல்

Published By: Digital Desk 4

24 Jun, 2022 | 05:23 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று (24) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ | Virakesari.lk

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட மொஹமட் சாகீர்  ஆகியோரையே இவ்வாறு நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட குறித்த  மூவருக்கும் எதிராக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு கடந்த மே 30 ஆம் திகதி  ஐந்து வழக்குகளை தாக்கல் செய்தது.

பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக  கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். ( 2021, மார்ச் 26 இல் 3 வழக்குகளில் இருந்தும், 2022 ஜனவரி 28 ஆம் திகதி இரு வழக்குகளில் இருந்தும் )

 குறித்த வழக்குகளை தாக்கல் செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் ஆணையாளர்கள் மூவரினதும் எழுத்து மூல அனுமதி பெறப்படவில்லை என்ற நிலையில், அவ்வழக்குகளை குற்றவியல் சட்டத்தின் 126 ஆவது அத்தியாயத்துக்கு அமைய மீள  வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் இவ்வழக்குகளை மீளப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அனுமதி கோரிய நிலையிலேயே, அவ்வழக்குகளை  மீளப் பெற அனுமதித்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 இவ்வாறான நிலையிலேயே குறித்த 5 வழக்குகளும் கடந்த மே 30 ஆம் திகதி  மீள மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 இதன்போது 49 சாட்சியாளர்களின் பட்டியலும், 9  ஆவணங்கலும் நீதிமன்றுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தை மையப்படுத்திய குற்றப் பத்திரிகையைக் கையளிப்பதற்காகவே நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு இன்று ( 24) அறிவித்தல் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08