ஜோன்ஸ்டனிடம் 4 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை

By T Yuwaraj

24 Jun, 2022 | 04:03 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் சி.ஐ.டி.யினர் இன்று ( 24) நான்கு மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

Articles Tagged Under: விசாரணை | Virakesari.lk

சி.ஐ.டி. பொலிஸ் அத்தியட்சர் ஜயதிலக தலைமையிலான குழுவினர் அவரிடம் இவ்வாரு விசாரணைகளை நடாத்தியதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இன்று முற்பகல் 9.00 மணிக்கு சி.ஐ.டி.க்கு சென்ற ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் நண்பகல் 1.00 மணி வரையிலும் விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும், இதன்போது அலரி மாளிகையில் தான் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் எனக் கூறி ஒர் இறுவெட்டினையும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ  சி.ஐ.டி.யினரிடம் கையளித்ததாகவும் அறிய முடிகிறது.

 முன்னதாக கடந்த 21 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் பிணையளிக்கும் போது, அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி இருப்பதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படியே அவரை இன்று சி.ஐ.டி.யில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்படி அவர் இன்று அங்கு ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right