பொருளாதார மீட்சிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் - இலங்கை உயர்ஸ்தானிகர்

Published By: Digital Desk 3

24 Jun, 2022 | 03:57 PM
image

(நா.தனுஜா)

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அந்நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகளுக்கும் இடையில் கடந்த செவ்வாய்கிழமை புதுடில்லியில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில்போது இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் 14 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பங்கேற்றிருந்ததுடன், இது இலங்கை உயர்ஸ்தானிகர் இத்தகைய சந்திப்பில் ஈடுபட்ட மூன்றாவது சந்தர்ப்பமாகும். 

அதன்படி ஆஸ்திரியா, பெலாரஸ், பெல்ஜியம், பொஸ்னியா, டென்மார்க், அயர்லாந்து, லக்ஸம்பேர்க், வடமெசிடோனியா, போர்த்துக்கல், சேர்பியா, ஸ்லோவேனியா, உக்ரெய்ன், மால்டா உள்ளிட்ட நாடுகளின் உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் மிலிந்த மொரகொடவுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அந்நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அவர்கள் உரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

மேலும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த உயர்ஸ்தானிகர், நாட்டின் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்சி ஆகியவற்றை இலக்காகக்கொண்டு முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார். 

அத்தோடு பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடனான உதவிச்செயற்திட்டத்திற்கு அங்கீகாரமளிக்கப்படும் வரையில் நிதியுதவிகளை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும், பொருளாதார மீட்சி செயன்முறைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவி வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“பணவீக்கம் உயரும் நிலையில் அதிகரித்த மஹபொல...

2026-07-23 05:14:49
news-image

ஜி.எஸ்.பி.+ உட்பட அனைத்து சலுகைகளையும் நிறுத்துங்கள்...

2026-07-23 05:09:09
news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40