( எம்.எப்.எம்.பஸீர்)
போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதி தலைவர் பதவி ஒன்றினை புதிதாக உருவாக்கி, அப்பதவியில் தனக்கு நெருக்கமான ஒருவரை அமர்த்தியதன் ஊடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவர் இன்று ( 24) விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கை, மீள வழக்குத் தொடரும் நிபந்தனையுடன் வாபஸ் பெற அனுமதியளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்யை அடுத்தே இந்த அனுமதியளிக்கப்பட்டு, குமார வெல்கம எம்.பி. விடுவிக்கப்பட்டார்.
இன்றைய தினம் சந்தேக நபரான குமார வெல்கம மன்றில் ஆஜராகியிருந்தார்.
அரசுக்கு 33 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு, தாக்கல் செய்யப்பட்ட முறைமையானது சட்டத்துக்கு முரண் என குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார வெல்கம சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் அடிப்படை ஆட்சேபனைகளை முன் வைத்திருந்த நிலையிலேயே, இவ்வழக்கு வழக்கை தொடுத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் மீளப் பெறப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM