3 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த கார் ; இருவர் பலி - சீனாவில் சம்பவம்

By T. Saranya

24 Jun, 2022 | 03:34 PM
image

சீனாவில் ஷங்காய் நரகத்திலுள்ள நியோ மின்சார கார் தயாரிப்பு நிறுவன தலைமையகத்தின்  மூன்றாவது மாடியில் இருந்து கார் ஒன்று வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

மூன்றாவது மாடியில் இருந்து கார் ஒன்று கீழே விழுந்ததில் நிறுவனத்தின் ஊழியரும், பங்குதாரர் நிறுவனத்தைச் சேர்ந்தவரும்  உயிரிழந்துள்ளார்கள் என நியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக நியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியோ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

விபத்துக்கான காரணத்தைப் பற்றிய விசாரணை மற்றும் பகுப்பாய்வை ஆரம்பிக்க எங்கள் நிறுவனம் பொது பாதுகாப்புத் துறையுடன் ஒத்துழைத்துள்ளது.

சம்பவம்  தொடர்பிலான ஆரம்ப விசாரணையில், இது விபத்து (வாகனத்துடன் தொடர்புடையது அல்ல) என்பதை நாங்கள் முதலில் உறுதிப்படுத்த முடியும்.

இந்த விபத்து குறித்து நாங்கள் மிகவும் வருத்துகிறோம். மேலும் உயிரிழந்த எங்கள் சக ஊழியர் மற்றும் பங்குதாரருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறோம். குடும்பங்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right