தமிழக மக்களால் வழங்கப்பட்ட 2 ஆம் கட்ட உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

By Vishnu

24 Jun, 2022 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவின் தமிழக மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக்தொன் அரிசி, 250 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 38 மெட்ரிக்தொன் மருந்துப்பொருட்கள் அடங்கிய பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதி இன்று 24 ஆம் தகிதி வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தன.

இந்த பாரிய மனிதாபிமான உதவித்தொகுதியானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் பிணைப்பினை சுட்டிக்காட்டும் அதேநேரம், இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளின் நலன்களில் இந்திய மக்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றது.

எதிர்வரும் நாட்களில் இந்த பொருட்கள் அரசாங்கத்தால் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக்தொன் அரிசி, 500 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளடங்கிய பாரிய உறுதிப்பாட்டின் இரண்டாம் கட்டமாக இந்த உதவிப்பொருட் தொகுதி அமைகின்றது.

முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்படும் பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான உதவி இவ்வாண்டில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியினை கொண்டுள்ளது. 

அந்நியச்செலாவணி ஆதரவான 2 பில்லியன் அமெரிக்க டொலர், மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்கடொலருக்கும் அதிகமான மூன்று கடனுதவித்திட்டங்கள் ஆகியவற்றுக்கு மேலதிகமாக இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மருந்துகளை வழங்குதல், இலங்கை மீனவர்களுக்கு மண்ணெய் விநியோகம், உதவிகள் தேவைப்படும் மக்களுக்கான உலர் உணவுகளை வழங்குதல் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

குறித்த உதவி பொருட்கள் வந்தடைந்ததையிட்டு உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், வி.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று அவற்றை வரவேற்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10
news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர்...

2022-09-29 21:23:52