உணவகத்திற்கு சென்று மின்வெட்டில் சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

By T Yuwaraj

24 Jun, 2022 | 03:15 PM
image

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் உணவகம் ஒன்றிற்குச் சென்ற போது, இலங்கையில் நிலவும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்து டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"இந்த வார தொடக்கத்தில் நாங்கள் உணவகம் ஒன்றுக்கு சென்றோம் இதன்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் வரும்வரை காத்திருக்கிறோம், மின்சாரம் வந்தவுடன் இரவு உணவு தொடரும்”

"இலங்கை தற்போது ஒரு கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் மக்கள் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர், மேலும் இங்கு இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right