பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஆணைக்குழு நிதியுதவியாக 1 மில்லியன் யூரோக்களை  வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவி  மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு மருத்துவம், தண்ணீர்,  சுகாதார சேவைகள், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் போன்ற  உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆம் திகதி அதிகாலை தெற்கு ஆப்கானிஸ்தானில்  6.1 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டது. பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில்ள்  மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பூகம்பத்தால் 1,000 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,500 பேர் வரை காயமடைந்துள்ளனர். பெரும்பாலனோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.