கோப் குழு அறிக்கையினை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி அதன் மூலம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அத்திணைக்களத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அந்நிறுவனத்திற்கு பிரதான பொறுப்புள்ளது. இருந்தபோதிலும் சட்டமா அதிபர்  திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளினால் அத்திணைக்களம் மீதுள்ள  நல்லபிப்பிராயம் அற்றுப்போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிர ஸ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.