பிரதமர் ரணில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் - சம்பிக்க

By Vishnu

24 Jun, 2022 | 03:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பது எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது.

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சிறந்த திட்டங்களை முன்வைக்காவிடின் நாட்டு மக்கள் பிரதமரின் வீட்டையும் முற்றுகையிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் உள்ளது.

2020ஆம் ஆணடுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 3 மடங்கால் அதிகரித்துள்ளன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இறுதி தீர்வு என பிரதமர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் என்ற ரீதியில் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை பிரதமர் இதுவரை முன்வைக்கவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கும்,மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் எத்திட்டத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு முன்வைத்த பொருளாதார மீட்சி திட்டத்தை போன்று சகல தரப்பினரும்  ஏற்றுக்கொள்ள கூடிய திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி சவாலை ஒரு கட்சியால் மாத்திரம் வெற்றிக்கொள்ள முடியாது.அரசாங்கம் சகல கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட அளவில் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும். கட்சிகளுடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாவிடின் பொதுத்தேர்தலுக்கு செல்வது சாத்தியமானதாக அமையும். ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷர்கள் தொடர்பில் அதிகாரத்தில் இருப்பது எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54