இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களுக்கு பசறை டெம்மேரியா தோட்ட முகாமையாளரால் பொருட்களை ஏற்றி வந்த போக்குவரத்து செலவுக்கென மக்களிடம் 50 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனையடுத்து செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாக இயக்குனரை தொடர்பு கொண்டு வசூலிக்கப்பட்ட பணத்தை உடனடியாக அந்தந்த தோட்டத்தை சேர்ந்த மக்களிடம் திருப்பி வழங்குவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.