அகவை 13 இல் வசந்தம் தொலைக்காட்சி

By T. Saranya

24 Jun, 2022 | 01:08 PM
image

வாழ்வின் வசந்தமாய் இலங்கை மக்களுக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி,  தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்று வரைக்கும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும்  வசந்தம் தொலைக்காட்சி  இன்று (25) தன்னுடைய 13வது அகவையில் கால் பதிக்கிறது.

எனவே ஒரு தசாப்பத்தை கடந்து இலங்கை மக்களுடைய வாழ்க்கையிலும் அவருடைய செயற்பாட்டிலும் முற்றுமுழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தொலைக்காட்சியாக வசந்தம் தொலைக்காட்சி காணப்படுகிறது.

எனவே கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலகட்டங்களிலும் கூட தொடர்ச்சியாக மக்களோடு மக்களாக நின்று அவருடைய தேவைகளை குறை நிறைகளை அதுமட்டுமில்லாமல் முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்த ஒரு தொலைக்காட்சியாக பரிணமித்த வரலாற்றை இலங்கை மக்கள் நன்கறிவர்.

ஆயினும் இந்த 2022 ஆம் ஆண்டு பிறந்தது முதற்கொண்டு இன்றுவரை  மிகவும் இக்கட்டான சூழ்நிலையை நம்நாடு மட்டுமன்றி மக்களும் அனுபவித்து வருகின்றனர்.

முழு நாடும் எரிபொருள் தட்டுப்பாடு,  வேலையில்லா பிரச்சினை,  பொருளாதாரப் பிரச்சினை என்று எண்ணிலடங்கா பல பிரச்சினைகளை எதிர்கொண்டு ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான காலகட்டத்திலும் கூட ஒரு அரசு தொலைக்காட்சி என்ற வகையில் இன்று வரைக்கும் மிகப் பிரதானமாக பல சமூக சேவையை இலங்கை மக்களுக்கு வழங்கி கொண்டு வருகின்றது வசந்தம் தொலைக்காட்சி.

எனவே வசந்தம் தொலைக்காட்சி மக்களின் தொலைக்காட்சி என்பதே சரியான பதமாகும்.

வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளர்  எஸ். கோணேஸ்வரராஜா

ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு காரணமாக இன்று வரைக்கும் இலங்கை மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அலைவரிசையாக பரிணமிக்கின்றது.

மேலும் பல சமூக ஊடகங்களின் வரவிலும் கூட அதற்கு ஈடுகொடுத்து அதற்கேற்ப தன் சேவையை விஸ்தரித்து வியாபித்து ஒவ்வொரு ரசிகர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது வசந்தம் டிவி.

எனவே மென்மேலும் இன்னும் பல தரமான நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் வழங்குவதற்கு வசந்தம் தொலைக்காட்சி தயாராகவே இருக்கின்றது. இலங்கையில் இருக்கும் பல தனியார் தொலைக்காட்சிகளோடு போட்டி போட்டுவது மட்டுமில்லாமல் தரவரிசையிலும் முன்னணியாக திகழ்கின்றது.

எனவே தொடர்ச்சியாக உங்களுடைய அன்பையும் ஆதரவையும் எப்பொழுதும் நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த 13 ஆவது ஆண்டிலும் நாங்கள் கால் பதிக்கிறோம்.

என்றும் எங்களோடு தோள்கொடுத்து இருக்கக்கூடிய எங்களுடைய அதி பெறுமதியான தொலைக்காட்சி ரசிகர்கள் எம் விளம்பரதாரர்கள் மற்றும் எங்களுடைய நலன்விரும்பிகள் அனைவருக்கும் இந்த வேளையில் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தினேஷ் சுந்தர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right