ஹமில்டன் ரிசேர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள நீதிமன்ற வழக்கை தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றம் ஐநாவிற்கான இலங்கை தூதுவர்  மொகான் பீரிசிற்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

பிணைமுறிக்கான கட்டணங்களை செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஹமில்டன் வங்கி செவ்வாய்கிழமை வழக்கு தாக்கல் செய்திருந்தது.