யாழில் இளைஞன் திடீர் மரணம் : எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானமையே காரணம் என குற்றச்சாட்டு!

Published By: Vishnu

24 Jun, 2022 | 12:40 PM
image

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞனும் , அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று இருந்தனர். 

அதன் போது , குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவரும் அவற்றை தமது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

முரண்பாடு முற்றிய நிலையில் இரு இளைஞர்கள் மீதும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இருவரும் காயமடைந்துள்ளனர். 

பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை தாக்குதலாளிகளிடம் இருந்து காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தனர். 

மறுநாள் திங்கட்கிழமை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்களில் ஒருவர் நெஞ்சு வலி என யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

வைத்தியசாலையில் அவரை விடுதியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47