ரோயல் பார்க் படுகொலை விவகாரம் - ரத்ன தேரரால் சி.ஐ.டி.யில் முறைப்பாடு

Published By: Digital Desk 4

23 Jun, 2022 | 11:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி இன்று (23) சி.ஐ.டி.யில்  முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Articles Tagged Under: அத்துரலியே ரத்ன தேரர் | Virakesari.lk

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை இன்று முற்பகல் தாக்கல் செய்துள்ளார்.

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய  இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டையைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ  கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். 

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

 இது குறித்து முன்னாள் ஜனாதிபதி அண்மையில் ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த குற்றவாளியை விடுவிக்க தான் பணம் பெற்றதாக கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மறுத்தார்.

எனினும் அவருக்கு மன்னிப்பளிக்க, அவரது குடும்பத்தாரை தன்னிடம் கூட்டி வந்து தொடர்ச்சியாக கோரிக்கை அளித்தவர் ரத்ன தேரர் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததுடன், குற்றவாளியின் குடும்பத்தினரிடமிருந்து பிரிதொரு தரப்பு பணம் பெற்றுள்ளதாகவும், கூறினார்.

 இந் நிலையிலேயே தனது பெயரையும் தொடர்புப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட  கருத்து குறித்து ரத்ன தேரர் முறைப்பாடளித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள்...

2024-04-12 21:41:41
news-image

ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை!

2024-04-12 21:00:04
news-image

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி...

2024-04-12 18:49:17
news-image

அண்ணனின் தாக்குதலில் தம்பி உயிரிழப்பு :...

2024-04-12 18:36:53
news-image

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2024-04-12 18:22:35
news-image

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ...

2024-04-12 17:53:23
news-image

கொவிட் தொற்றினால் குருணாகல் வைத்தியசாலையில் ஒருவர்...

2024-04-12 17:36:50
news-image

இலங்கையுடனான பாதுகாப்பு இராஜதந்திரத்தை தீவிரப்படுத்தும் இந்தியா...

2024-04-12 09:10:18
news-image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய...

2024-04-12 16:57:02
news-image

யாழில் இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல்...

2024-04-12 16:50:32
news-image

ஜூலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு -...

2024-04-12 08:58:25
news-image

'சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு புத்தாண்டு'  -...

2024-04-12 08:51:18