சர்வதேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பானது (IMHO) சர்வதேச அளவில் மனிதாபிமான அடிப்படையில் செயற்படும் ஒரு அமைப்பாகும். இதன் பிரதான நோக்கமானது உலகெங்கிலும் பின்தங்கிய நிலையிலுள்ள சுகாதார சேவைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதாகும்.

IMHO ஆனது உலக நாடுகளின் சுகாதார தேவைகளைக் கண்டறிந்து அதனை பூர்த்தி செய்வதற்கான வளங்களையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொடுத்து உலகம் முழுவதும் சிறந்த சுகாதாரத்தை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்படுகின்றது. 

அவசர காலங்களின் போது உயிர்களை பாதுகாப்பதற்கான ஆதரவை  IMHO  ஆனது 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகின்றது. மேலும் உலகிலுள்ள 18 நாடுகளிலுள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் பல வளர்ச்சித்திட்டங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பானது (IMHO) ஜூன் மாதம் 2022 ஆம் திகதி தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, 5000 அமெரிக்க டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை பொருட்களை சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

மேலும் கொவிட் 19 தொற்றுநோயின் போது சர்வதேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட நன்கொடைகளால் எம்மால் தொற்றுநோய்க்கு எதிராக போராட முடிந்தது.