ஆப்கான் நிலநடுக்கம் - திரும்பும் திசைகளில் எல்லாம் அழுகுரல்

Published By: Rajeeban

23 Jun, 2022 | 05:08 PM
image

பிபிசி

சிலஹெலிக்கொப்டர்கள் வந்தன ஆனால் உடல்களை அகற்றுவதை தவிர  வேறு எதனை அவர்களால் செய்ய முடியும் என்பது தெரியவில்லை.ஆப்கானிஸ்தானை பாரிய பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலையை ஒருவர் இவ்வாறே தெளிவுபடுத்தினார்.

அதிகாலையில் இடம்பெற்ற பூகம்பம் காரணமாக வீடுகளும் நொருங்கிவிழுந்தன உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய முடிந்தால்  மீட்பு பணியாளர்கள் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றிவருகின்றனர்.

ஆப்கானின் கிழக்கில் உள்ள பகுதிகளிற்கு செல்வது அவ்வளவு இலகுவான விடயமில்லை,பூகம்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் கிடைத்தவுடன் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்.

இரவு 1.30 மணிக்கு பின்னர் பூகம்பம் தாக்கியது நான் அச்சமடைந்தேன் நான் எனது நண்பர்களை கண்டுபிடிக்க முயன்றேன் சிலர் அவர்களின் உறவினர்களை இழந்திருந்தனர்,சிலருக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை ஆனால் அவர்களின் வீடுகள் தரைமட்டமாகிவிட்டன என அஹமட் நூர் தெரிவித்தார்.

அம்புலன்ஸ் சைரன்சை எல்லா இடங்களிலும் கேட்க முடிகின்றது நான் மக்களுடன் பேசினேன்,அவர்கள் விரக்தியடைந்துள்ளனர் அவர்கள் பலரை இழந்துள்ளனர்அவர்கள் மிகவும் துயரமான நிலையில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது காணப்படும் நிலைமையை நேரில் பார்த்தவர்கள் விபரித்தனர், நீங்கள் போகும் ஒவ்வொரு வீதியிலும் அழுகுரல்கள் கேட்கின்றன,மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைத்து கதறுகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர்.

மூன்றுநான்குவயதுடைய  சிறுமி ஒரளவு சேதமடைந்த வீட்டினை பார்த்தவாறு நிற்க்கும் படமொன்று பிபிசிக்கு கிடைத்தது,அவளது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை அவளது நலன்குறித்து அறிவதற்கு பிபிசி முயல்கின்றது.

49 வயது அலெம்வாவா இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்காக பக்டிக்கா மாகாணத்தின் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார்.

உத்தியோகபூர்வ மனிதாபிமான பணியாளர்கள் எவரும் இல்லை ,அயலில் உள்ள கிராமங்கள் நகரங்களை சேர்ந்தவர்களே உதவிக்கு வந்தனர் என அவர் தெரிவித்தார்.

நான் இன்று காலை வந்தேன் நான் 40 உடல்களை மீட்டேன்,அவர்கள் இளவயதினர் மிக இளவயதினர் சிறுவர்கள் என அவர் குறிப்pட்டார்.

ஆப்கான் மக்கள் பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர் வறுமை பெருமளவிற்கு காணப்படுகின்றது நாடு பல மோதல்களை சந்தித்துள்ளது,தலிபான் கடந்த வருடம் அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து பல நாடுகள் உதவிகளை நிறுத்திவிட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04