பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் - அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர்

Published By: Digital Desk 3

23 Jun, 2022 | 11:38 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் முதலாவது ஆய்வுப்பல்கலைக்கழகமான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளரான ஸ்டீவ் ஹன்க் மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த சில மாதங்களாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளைச் செய்துவருகின்றார். 

அதன்படி இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் நேற்றைய தினம் செய்திருக்கும் பதிவிலேயே ஸ்டீவ் ஹன்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைவரம் படிப்படியாக மிகமோசமடைந்துவருவதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது அண்ணளவான மதிப்பீட்டின்படி இலங்கையின் வருடாந்தப் பணவீக்கம் 130.14 சதவீதமாகக் காணப்படுவதாகவும் இது நாட்டின் உத்தியோகபூர்வ வருடாந்தப் பணவீக்கமாகக் காணப்படும் 39.10 சதவீதத்தின் 3 மடங்கை விடவும் உயர்வாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கை ரூபாவின் பெறுமதி 50 சதவீதத்தால் வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே நாட்டில் உணவு, உரம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், தற்போது இலங்கை அதன் கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடைந்திருப்பதாகவும் இது ஜனாதிபதி பதவி விலகவேண்டிய தருணமென்றும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு...

2023-12-10 16:21:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32