அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவில் இலங்கையிலிருந்து குடியேற்றவாசிகளின் படகுகள் வருவதற்கு புதிய தொழில்கட்சி அரசாங்கமே காரணம் என லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வாரங்களில் அவுஸ்திரேலியஎல்லை பாதுகாப்பு படையினரும் இலங்கை கடற்படையினரும் நான்கு படகுகளை தடுத்துநிறுத்தியுள்ளனர்,அதிலிருந்த அகதிகள் புதிய தொழில்கட்சி அரசாங்கம் தங்களை திருப்பி அனுப்பாது என தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர் எனவும் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு இது உருவாகிவரும் குறிப்பிடத்தக்க பிரச்சினை ஆனால் இந்த பிரச்சினைக்கு அவர்களே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குழப்பநிலை அவுஸ்திரேலியாவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாகவில்லை,சில காலமாகவே இலங்கையில் பொருளாதார சமூககுழப்பங்கள் காணப்பட்டன என பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கம் இறைமையுள்ள எல்லைகள் எனற நடவடிக்கையை கைவிட்டமையே படகுகள் வரமுயற்சிப்பதற்கு காரணம்,புதிய அரசாங்கம் தாங்களும் இறைமையுள்ள எல்லைகள் நடவடிக்கையை தொடர்வதாக தெரிவிக்கின்ற போதிலும் அதனை கைவிட்டுவிட்டது எனவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

.