விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த பொருத்தமான சட்டத்தை இயற்றுமாறு பரிந்துரை

Published By: Vishnu

23 Jun, 2022 | 11:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2017 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபை திருத்தச்சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் நடைமுறையில் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்த குழு இணக்கம் தெரிவித்ததால் உள்ளூராட்சித் தேர்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின்படி தேவையான வரையறை நிர்ணயத்துடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைக்கான சட்டம் இயற்றப்படும் வரை, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சட்டத்தை இயற்றுமாறு தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழு பரிந்துரை செய்துள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல்

2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 2018ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலின் மூலம் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட உள்ளுராட்சி அதிகார சபைகளின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என குழுவில் அதிகளவானோர் யோசனை முன்வைத்துள்ளனர்.

சமூகங்கள் மற்றும் அமைப்பில் பிரதிநித்துவம் இல்லாத கட்சிகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு அரசியல் கட்சிகள் தெரிவு குழுவிடம் வலியுறுத்தியுள்ளன.

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களுடன் உள்ளுராட்சி தேர்தல் முறைமையின் மீளாய்வுக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளையும் குழு பரிசீலனை செய்துள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைகளில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு குழுவின் சகல உறுப்பினர்களும் உடன்பட்டுள்ளனர்.

புதிய எல்லை நிர்ணயம் மூலம் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் அல்லது விகிதாசார பிரதிநிதித்துவப் பகுதியைக் குறைப்பதன் ஊடாக உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளூராட்சி  சபை தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு 2018ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்போதைய உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முறைறைத் தொடர்து பொருத்தமானது.

அந்தவகையில் தொகுதிவாரி 60 சதவீதமாக மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதம் என்ற வகையில் தக்கவைக்கப்பட வேண்டும். அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தொங்கு ஆசனங்கள் அகற்றப்பட வேண்டும் என தெரிவு குழு யோசனை முன்வைத்துள்ளது.

மாகாணசபை தேர்தல்

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறையின் கீழ் (விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை) நடத்துவதற்கு குழு இணக்கம் தெரிவித்திருந்தாலும்,2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் திருத்தச் சட்டத்தினால் இரத்து செய்யப்பட்ட அட்டவணைகள் மற்றும் படிவங்கள் உள்ளிட்ட முதன்மைச்ச்டத்தின் ஏற்பாடுகள் பொருத்தமான சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் மீண்டும்  செயற்படுத்தப்பட வேண்டும் என சட்டமாதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபை திருத்தசசட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு குழு இணக்கம் தெரிவித்ததால் உள்ளூராட்சித் தேர்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின்படி தேவையான வரையறை நிர்ணயத்துடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைக்கான சட்டம் இயற்றப்படும் வரை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சட்டத்தை இயற்றுமாறு குழு பரிந்துரை செய்தது. சபை மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு மும்மொழியப்பட்ட சட்டத்தை அமைச்சரவையில் அங்கிகாரத்திற்கு சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரை செய்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து 225 ஆக காணப்பட வேண்டும். பாராளுமன்றத் தேர்தலின் கலப்பு முறையை அறிமுகப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளது.

அதாவது 70 சதவீதம் தொகுதிவாரி முறைமை,30 சதவீதம் விகிதாசார முறைமை,தேசிய பட்டியல் முறைமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் பாராளுமன்ற அமைப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை கடுமையாக பாதிக்கும் என குழுவினர் சுட்டிக்காட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10