Published by T. Saranya on 2022-06-23 16:23:11
நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
92 ஒக்டோன் பெற்றோலின் விலை 74 ரூபாயினால் அதிகரிக்கும் எனவும், 95 ஒக்டோன் பெற்றோலின் விலை 78 ருபாயினால் அதிகரிக்கும் எனவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 56 ரூபாயினாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாயினாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாயினாலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.