வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (22) இரவு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் போது பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இராணுவ லெப்டினன் கேர்னலுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து லெப்டினன் கேர்னல் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியமை பெற்றோல் நிலையத்தில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் லெப்டினன் கேர்னல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (23) வரக்காபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.