கொட்டாவ, மாகும்புர பகுதியில் சட்டவிரோதமாக 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர்  இன்று கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த நபரின் வீட்டின் மாடியிலிருந்து, 500 லிற்றர் தொட்டியும், அவரது வணிக வளாகத்தில் மற்றொரு சிமிலேட் தொட்டியுமாக இரண்டு டீசல் பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.