நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Published By: Digital Desk 3

23 Jun, 2022 | 11:21 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள்  மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும்  அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர்  ரேணுகா லியனகே தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இது செவிடன் காதில் ஊதிய  சங்கு மாதிரியான செயலாகவே அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து  அவர் தொடர்ந்து கூறுகையில், 

"தற்போது சுமார் 1,500 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முன்னர் நல்ல போஷாக்கான  உணவு வழங்கப்பட்டபோதிலும், தற்போது சோற்றுடன் இரண்டு கறிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அவற்றில், பூசணிக்காய், பருப்பு, உருளைக்கிழங்கு, மாங்காய் கறி, கரட் என ஏதாவது இரண்டு கறிகளுடன் மாத்திரமே சோறு வழங்கப்படுகிறது. ஒரு துண்டு மீன் அல்லது முட்டை தற்போ வழங்குவதில்லை. 

மேலும், நோயாளிகளுக்கு முன்னர் ஆரஞ்சு பழம், தயிர், யோகட், ஜெலி போன்றனவும்  வழங்கப்பட்ட போதிலும், தற்போது அவை வழங்கப்படுவதில்லை.

நீரிழிவு நோய்,  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை. 

அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுகிறது. நோயாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு சத்தான உணவு கூட கிடைப்பதில்லை.

சுகாதார பணியாளர்களுக்கு தேங்காய் சம்பல், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் பூசணி போன்றவற்றுடனே சோறு பரிமாறுகிறார்கள் "என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01