( எம்.எப்.எம்பஸீர்)
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் நேரடியான பங்களிப்புக்களை நல்கி வரும் 7 முன்னணி போராட்டக்காரர்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவின் வீதிகளிலும் பொலிஸ் தலைமையகம் முன்பாகவும் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மையப்படுத்தி இவர்களை இவ்வாறு விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 17 ஆம் திகதி, 9 முன்னணி போராட்டக் காரர்களைக் கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரனிந்து சேனாரத்ன எனும் ரெட்டா, ஜகத் மனுவர்ன, தம்மிக முனசிங்க, ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரையே கைது செய்ய இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்களில் வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரை தவிற ஏனையோர் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே, கோட்டை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு பொலிஸாரால் அவர்கள் ஆஜர்ச் செய்யப்பட்டனர். இதனையடுத்தே அவர்களை விலக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சட்ட விரோத கூட்டமொன்றின் உறுப்பினராக செயற்பட்டமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விலைவித்தமை, பலாத்காரம் செய்தமை, பொது மக்களுக்குய் இடையூறு ஏற்படுத்த்யமை, பொதுச் சொத்துக்கள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, கடந்த 10 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பில் வசந்த முதலிகே சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அது குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. எனினும் அவ்வழக்கில் எந்த கைது உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM