அக்னிபாத் திட்டத்தை டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

இளைஞர்கள் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைத் தவிர, தொழில்துறைக்கு மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை டாடா குழுமம் வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் கூட்டு நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி ஆகியோர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.

'அக்னிபாத் இளைஞர்களுக்கு தேசத்தின் பாதுகாப்புப் படைகளுக்குச் சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு மட்டுமல்ல, டாடா குழுமம் உட்பட தொழில்துறைக்கு மிகவும் ஒழுக்கமான மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் கிடைக்கச் செய்யும்' என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'டாடா குழுமத்தில் உள்ள நாங்கள் அக்னிவீர்ஸின் திறனை அங்கீகரிக்கிறோம்.

கடந்த வாரம், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. அதே நேரத்தில் திட்டத்திற்கு எதிராக பல இடங்களில் அமைதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.