வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
22 ஆம் திகதிபுதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்திற்கு எரிபொருள் பெறுவதற்காக குறித்த இயந்திரத்தினை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி சென்றுகொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓமந்தையில் இருந்து பறன்நட்டகல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவரை அதே திசையில் பயணித்த கார் மோதியதில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபர் பலியானதுடன் மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து குறித்த காரினை கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM