ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 4.3 ரிச்டர் அளவில் வியாழக்கிழமை காலை ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்-தென்மேற்கே 76கிமீ கிலோமீட்டர் தொலைவில் 163 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று  புதன்கிழமை, தென் ழக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 1000 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டத்திலும், பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மாலா, ஜிருக், நாகா மற்றும் கயான் மாவட்டங்களிலும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.