பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்யுமாறு தலிபான்கள் சர்வதேசத்தை கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை (22) அதிகாலை 6.1 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டது.

இந்த பூகம்பத்தால் 1000 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,500 பேர் வரை காயமடைந்துள்ளனர். பெரும்பாலனோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

தென்கிழக்கு பக்திகா மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவசரகால தங்குமிடம் மற்றும் உணவு உதவிகளை ஐ.நா. வழங்க வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கனமழை மற்றும் போதிய வசதிகள் இல்லாமையால் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நேரிடும் என அச்சம் நிலவுகின்றது.

இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை தாக்கிய மிக மோசமான பூகம்பம் இதுவாகும். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபானுக்கு இது  ஒரு பெரிய சவாலாகும்.

கோஸ்ட் நகரத்திலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட பூகம்பம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரையிலும் உணரப்பட்டது.