மே 9 வன்முறைகள் : ஜோன்ஸ்டன் புதிய பிணை உத்தரவின் கீழ் விடுதலை 

Published By: Digital Desk 4

22 Jun, 2022 | 10:25 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான  விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சட்ட விரோத கூட்டத்தினை கூட்ட சதி செய்துள்ளமை தொடர்பில்  விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் இன்று ( 22) நீதிமன்றுக்கு அறிவித்தார்.

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ | Virakesari.lk

 

சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன இதனை நீதிவான் திலின கமகேவுக்கு குறிப்பிட்டார்.

' 28 ஆவது சந்தேக நபரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறித்த விசாரணைகளில் அவர் தண்டனை சட்டக் கோவையின் 120  ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றமொன்றினை இழைத்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை  மூவர் கொண்ட மனோ தத்துவ நிபுணர்கள் குழுவும் உறுதி செய்யும் வகையில் அறிக்கையளித்துள்ளனர்.

 அத்துடன்  சந்தேக நபரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,  சட்ட விரோத கூட்டத்தை கூட்ட சதி செய்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 113 ( ஆ) பிரிவின் கீழும், தண்டனை சட்டக் கோவையின்  143 ஆம் அத்தியாயத்தின் கீழுமான குற்றமொன்றினை அவர் புரிந்துள்ளார் என  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன  குறிப்பிட்டார்.

இந் நிலையில், 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தொடர்பில் கோட்டை நீதிமன்றம்  புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று ( 21)அறிவித்த நிலையில், இன்று ( 22) நீதிமன்றம் அவருக்கு பிணையளிக்க முடியுமா எனவும் ஆராய்ந்தது.

 இந்த மேன் முறையீட்டு நீதிமன்ற உத்தரவு தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரனி சரத் ஜயமான்ன  மன்றில் விடயங்களை முன் வைத்து, புதிய உத்தர்வு பிறப்பிக்கப்படல் வேண்டும் என கோரினார்.

 இதன்போது அரசின் மேலதிக சொலிசிட்டர்  ஜெனரல் அய்ஷா ஜினசேன,  பிணை சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் பிணையை ரத்து செய்ய ஏதுவான காரனிகளை சந்தேக நபர் முன்னெடுக்காத நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட முடியாது என கோரினார்.

 ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரனி சம்பத் மென்டிஸ்,  தனது சேவை பெறுநர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ள பின்னணியிலும், அவருக்கு பிணையளிப்பதால் எந்த பொது மக்கள் குழப்பங்களும் ஏற்படப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டி,  மேலதிக சொலிஸ்ட்டர் ஜெனரல் அய்ஷ அஜினசேன முன் வைத்த விடயங்களும் ஒத்துப் போய்,  எந்த நிபந்தனையின் அடிப்படையிலும் பிணை அளிக்குமாறு கோரினார்.

 அதன்படி 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் ஜோன்ஸ்டனை விடுவித்து புதிய உத்தர்வைப் பிறப்பித்த நீதிவான் திலின கமகே,  பிணையாளர்களின்  கிராம சேவகர் உறுதிப் பத்திரத்தையும் சொத்து குறித்த சான்றிதழையும் மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்ட நீதிபதி, வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51