கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 13,640 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் மீட்பு

By T Yuwaraj

22 Jun, 2022 | 05:35 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13,640 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் எனும் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்றை  விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி நெதர்லாந்தில் இருந்து மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள போலி முகவரிக்கு விமான அஞ்சல் மூலம் குறித்த பொதி  அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை குறித்த பொதியை  பெற்றுக்கொள்ள யாரும் வராததால், அதை திறந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, இலங்கை தபால் திணைக்களம், இலங்கை சுங்க போதைப்பொருள் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ஊழியர்கள் முன்னிலையில் இலங்கை தபால் மதிப்பீட்டுப் பிரிவினரால் இன்று குறித்த பொதி திறக்கப்பட்டது.

இதன்போது பொதி ஏழு தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஒரு மெத்தாம்பெட்டமைன் மாத்திரையின் சராசரி சந்தை மதிப்பு ரூ.10,000 என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44