(எம்.வை.எம்.சியாம்)
புத்தளம் கற்பிட்டி - எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த போது இவர்களுக்கு இடையில் இவ்வாறு மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM