கொரோனாத் தொற்றுப் பாதிப்பிற்கு பின்னர் எம்மில் பலருக்கும் கண் பார்வைத் திறன் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக எம்முடைய நோய் எதிர்ப்புத் திறன் மண்டலம், தவறுதலாக எம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை அழிக்க தொடங்குகிறது.

இதன் காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் பார்வை நரம்பு தளர்ச்சி பாதிப்பும் ஒன்று. தற்போது இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மல்டிபிள் ஸ்களீரோஸிஸ் என்ற பாதிப்பின் காரணமாகவும், நோய்த் தொற்று காரணமாகவும் பார்வை நரம்பு அழற்சி பாதிப்பு ஏற்படுகிறது.

வலது கண் அல்லது இடது கண் என ஏதேனும் ஒரு கண்ணில் வலி அல்லது இரண்டு கண்ணிலும் வலி, ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் திடீரென பார்வை இழப்பு, நிறக்குருடு, கண்களை வலது புறமோ, இடது புறமோ அசைக்க இயலாத நிலை... இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவை பார்வை நரம்பு வீக்கம் அடைந்திருக்கலாம் என அவதானித்து, உடனடியாக கண் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால், பார்வை திறன் மீட்கப்படுவதில் பாரிய சிக்கல் ஏற்படும். அத்துடன் சேதமடைந்து இருக்கும் பார்வை நரம்புகளை மீட்டெடுக்க இயலாமல் போகக்கூடும்.

இதற்கு வழமையான கண் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு Pupillary Light Reaction Test எனப்படும் பிரத்யேக சோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இதனுடன் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சையை தீர்மானிப்பர்.

சொட்டு மருந்து, மருந்து, ஸ்டீராய்டு மருந்து ஆகியவற்றின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள். மல்டிபிள் ஸ்களீரோஸிஸ் என்ற பாதிப்பின் காரணமாக பார்வை நரம்பு சேதமடைந்திருந்தால், அதனை மீட்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை முற்றாக பின்பற்ற வேண்டும்.

டொக்டர் பிரசாந்த்

தொகுப்பு அனுஷா.