முறக்­கொட்­டஞ்­சே­னை பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் வைத்து சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.