தென் கிழக்காசிய நாடுகளின் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

By T. Saranya

22 Jun, 2022 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

புவியியல் நெருக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள், விவசாய அபிவிருத்தி, கல்வி மற்றும் ஏனைய பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி தூதுக்குழுவின் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.

பல்வேறு துறைகளில் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மியன்மார் தூதுவர் ,  மலேசிய உயர்ஸ்தானிகர் , வியட்நாம் தூதுவர் , தாய்லாந்து தூதுவர் , இந்தோனேசிய தூதுவர் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right